மேகமலை பற்றிய அழகும்,அதன் சுவாரஸ்யங்களும்.!

ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் ஜம்முனு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறது மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, பெயருக்கு ஏற்றார்போல மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஓர் அழகிய இடம். மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. அரிதான ஹார்ன்பில், சலீம் அலி வவ்வால், எங்குமே காணக் கிடைக்காத ஹூட்டன் பிட் வைபர் பாம்பு முதலிய பல அரிய வகை பறவைகள், விலங்குகளின் வாழிடமாகத் திகழ்கிறது மேகமலை. இது பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதற்கு ஏற்றார்போல அருமையான க்ளைமேட் மேகமலைக்கு மக்களை இழுத்துவருகிறது என்றே சொல்லலாம்.எங்குமே காணமுடியாத சிறப்பான நில அமைப்பைக் கொண்ட மேகமலை ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு. 1920-களில் தேயிலை தோட்டங்களை அமைத்தனர். தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அந்தத் தேயிலை தோட்டங்கள் விரிந்து பரவியுள்ளன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மேகமலை தற்போது தேர்வு நிலை