
தஞ்சாவூர் சரஸ்வதி மகால்
தஞ்சாவூர்தஞ்சாவூர் சரஸ்வதி மகால் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மகால் நூல கம் ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்றாகும். தஞ்சாவூரை ஆட்சிசெய்த நாயக்கர்கள், மராட்டியர்கள் இந்த நூலகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் நூல்கள் மீது கொண்ட ஆர்வத் தால், நூலக வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தார்.இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் 24,165 ஓலைச்சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப் பட்ட 3 லட்சம் மோடி எழுத்து வடிவ ஆவ ணங்களும் உள்ளன. பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா லட்சணங்கள் என்ற நூலும், கிரந்த எழுத்தில் 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட வால்மீகியின் முழுமையான ராமாயண சுவடியும் உள்ளது.அத்துடன் அரியவகை மூலிகைகள், மருத்துவக் குறிப்புகளும், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் உள்ளிட்டவை குறித்த நூல்களும் உள்ளன. மன்னர் காலத்தில் மன்னரும், மன்னரின் குடும் பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி