
வெற்றிமாறன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .
நடிகர் சிம்புவிற்கு கடைசியாக வந்த படங்களின் (மாநாடு ,வெந்து தணிந்தது காடு ,பத்து தல ) வெற்றியே தொடர்ந்து கமல்ஹாசன் கதாநாயகனாக மற்றும் மணிரத்னம் இயக்க கூடிய "Thug Life" திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கின்ற செய்தியும் உள்ளது .அதனை தொடர்ந்து , ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில்,ஓ மை கடவுளே படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ள காதல் கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக செய்தி தற்போது வந்துள்ளது .இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு ,மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக ,வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ,வெற்றிமாறனின் கதை, திரைக்கதையில், கவுதம் வாசுதேவ் மேனன் வசனத்தில் ஒரு படம் எடுக்க உள்ளதாகவும் ,அதில் சிம்பு நடிக்க உள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p