Cinema News

நடிகர் விக்ரம் பிறந்தநாள்: தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு

சென்னை, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், ''இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கலான்' என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோ விக்ரம், அவரது கதாபாத்திரத்திற்காக தயாராகும் முறை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சீயான் 62 படத்தின் புதிய அப்டேட் - போஸ்டர் வெளியிட்ட விக்ரம்

சென்னை, தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.மேலும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகிறது. இதுவரை இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.இது குறித்து நடிகர் விக்ரம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சீயான் 62 படம் குறித்த முக்கிய அறிவிப்பு விக்ரமின்