
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்களில் இந்திய வீரரே முதலிடம்?? விராட், தோனியே இவருக்கு பின்னர் தானாம்!!
உலக மக்களின் அனைவரது மனதிலும் இடம்பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.இதில் விளையாடும் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்போ மக்கள் மனதில் நடிகர்களை போல அவர்களின் உணர்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் வெற்றியை ஒரு வெற்றித் திருவிழா போன்று கொண்டாடுகின்றனர். இந்த விளையாட்டானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பின்பற்றப்படும் விளையாட்டாக இருப்பதால் இதில் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள் வீரர்கள். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் நிகழ்வுகள், கிரிக்கெட் லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் நிறைய வருமானத்தை பார்க்கின்றனர். இருப்பினும், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் பணம் கொட்டும் குபேரனை போன்று இருக்கும் சூழலில் உலக பணக்கார பட்டியலில் முதல் மூன்று இடத்தை நம் இந்திய வீரர்களே இடம் பிடித்துள்ளனர், பின்னர் டாப் 5 இடத்தில ஆஸ்திரேலியா வீரர்களான ஆஸ்திரேலியாவின் ரிக்கி