
என்னது இந்த மீன்களுக்கு இவ்வளவு புரதம் இருக்கா?!!இதனால் ஏற்படும் பேராபத்து!!
ஜிலேபி மீன்களை பொதுவாக கடலின் கோழி என்று அழைப்பார்கள், இவை வாழும் இடங்கள் தான் ஆறு, குளம், குட்டை, கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் அதிகளவில் வாழ்கின்றன. இந்த மீனானது சுவைமிக்க மீனாகவும் உள்ளதால் இதற்கு மீன்பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இந்த மீன் இனங்கள் உலகம் முழுவதும் பரவி காணப்பட்டு வருகிறது. இவை தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பாக்ஜலசந்தி கடலில் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறையின் மூலம் மெரைன் ஃபீல்ட் ரிசர்ச் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று மதுரையைச் சேர்ந்த மெரைன் பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் ஜிலேபி மீன்கள் பற்றி கூறி இருக்கிறார்.