
உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் மிக பெரிய விளைவுகள் ! Too much salt can cause serious side effects
உப்பு சுவைக்காக மட்டுமல்ல தசை ஆரோக்கியம், நரம்பு செயல்பாடுகள் மற்றும் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் உப்பு இன்றியமையாததாகும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.உப்பு உணவின் தவிர்க்க முடியாத பொருள். சுவைக்காக மட்டுமல்ல தசை ஆரோக்கியம், நரம்பு செயல்பாடுகள் மற்றும் நீர்ச்சத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்களுக்கும் உப்பு இன்றியமையாததாகும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக அதிக உப்பு சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். அப்படி உப்பு அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.ஹைப்பர்டென்ஷன் : அதிக உப்பால் பலரும் பாதிக்கப்படும் பிரச்சனை உயர் இரத்த அழுத்தம். உடலில் அதிக உப்பு உறிஞ்சப்படும்போது அதை இரத்தத்துடன் கரைக்க உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படி அதிக நீர் இரத்தத்தில் கலக்கும்போது இரத்தத்தின் அளவு அதிகரித்து