National News

இலவசமா?? அப்போ உடனே இத பண்ணுங்க ஆதார் கார்டின் புதிய அப்டேட் !! | New Aadhaar Card Update

இந்திய மக்களின் முக்கியமான அடையாளமே ஆதார் கார்டு தான். தற்பொழுது செப்டம்பர் 14 வரை இந்த இலவச அப்டேட் ஒன்றை வீட்டில் இருந்தே செயலி மூலம் செய்யுமாறு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.                         பத்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த ஆதார் கார்டினை புதுப்பித்தல் அவசியமாகும்.ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையமும் (UIDAI) ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது.உங்கள் ஆதார் கார்டில் பெயர், குடும்பப் பெயர் போன்றவற்றை பெயர் சேர்க்க விரும்பினாலோ அல்லது வீட்டு முகவரியை மாற்ற விரும்பினாலோ அதை உடனே செய்யலாம். செப்டம்பர் 14 இதற்கான அவகாசம் உள்ளதால் அதற்கு முன் உங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம் இதை எதையுமே எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே எந்த கட்டணமும் செலுத்தாமல்

கோவேக்சின் பக்கவிளைவுகள் குறித்த ஆய்வறிக்கை - ஐ.சி.எம்.ஆர். கண்டனம்

புதுடெல்லி, சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து நாடு முழுவதும் வழங்கியது. அதே சமயம், கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்தது.இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை சரிவு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவித்தது. அத்துடன் சந்தைகளில் இருந்தும் அந்த தடுப்பூசி திரும்பப்பெறப்பட்டது.இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசி குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

ஜூன் 4ஆம் தேதி கடைசி.. Google Pay செயல்படாது.. என்ன காரணம்? இதோ முழு விபரம்..

                                                                கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது வரும் ஜூன் 4க்கு பிறகு இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.கூகுள் பே செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது . அதுவும் நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள்

ஓய்வு குறித்து சென்னை அணியின் நிர்வாகிகளிடம் தோனி கூறியது என்ன..? வெளியான தகவல்

                                                                                                                                                                     Products பார்க்க Click The Link : https://nibz.in/products/filtercategory=&district=&scategory%5B%5D=&keyword=3+seater+sofa+in+trichyசென்னை, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத்,

“இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்" -WHATSAPP

“வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்” என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வாதம்!ஒன்றிய அரசின் புதிய IT விதிகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இந்த வாதத்தை வாட்ஸ்அப் முன்வைத்துள்ளது. இந்த விதிகளின்படி குற்ற வழக்குகளின் விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில், Encryptionஐ உடைத்து பயனர்களின் CHAT தகவல்களை வாட்ஸ்அப் வழங்க வேண்டும்.இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .source :

தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,755-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.source : https://www.dailythanthi.com/News/State/gold-price-has-slightly-increased-what-is-the-situation-today-1103227

இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வாழ்த்து கூறி  தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும். என குறிப்பிட்டுள்ளார்.மேலும் , இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கபட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று