
தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
சர்வதேச அரங்கில் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றங்கள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, தங்க விலை திங்கள்கிழமையை தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் தீவிரமாகச் சரிவைச் சந்தித்தது. கடந்த வாரம் பதிவான உச்ச நிலையில் இருந்து தங்க விலை 2.5% க்கும் மேல் சரிந்துள்ளது.தங்கம் விலை உயர்வு எப்படி ஒரு பெரும் மக்கள் கூட்டத்திற்கு நன்மை அளிக்கிறதோ, அதேபோல் தங்கம் விலை சரிவு நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு நன்மை அளிக்கிறது. தங்கத்தை முக்கிய நிகழ்வுக்காக வாங்கக் காத்திருப்போருக்குத் தொடர்ந்து 2 நாள் விலை சரிவு என்பது ரஜினிகாந்த் சந்திரமுகி-யை பார்த்து சாதித்த உணர்வில் தான் இருக்கின்றனர்.சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தக துவக்கத்தில் 2392 டாலராக இருந்தது, ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் 2302 டாலராக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 24 மணிநேரத்தில் 90 டாலர் குறைந்துள்ளது. தற்போதைய சந்தை சூழ்நிலையில், தங்கத்தை வாங்கியவர்கள் அனைவரும் அதை