National News

கொல்கத்தா: நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி

 ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் இந்த மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். இதையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் - எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரெயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த

கொரோனா காரணமில்லை.. ஆனால்.. அதிகாலையில் விஜயகாந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? பின்னணி

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். இதையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.வழக்கமான பாதிப்பு இல்லை:அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்.. தொடர் விடுமுறை காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஆர்பிஐ திட்டவட்டம்!!

 வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு 4 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதால், செப்டம்பர் 30ம் தேதிக்கு பின், அந்த நோட்டு செல்லாதது ஆகிவிடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மிலாடி நபி, வார விடுமுறை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்க மாறும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து வங்கிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றி வந்தனர். செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை

பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு

சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாகியது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. விரிவான விவாதத்திற்குப் பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, "அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது.

TNEB இல் உங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்தால் உங்கள் ஏரியாவில் எப்போது மின்தடை என்பதை தெரிந்துக்கொள்ளலாம்

சென்னை: உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளமான https://www.tnebltd.gov.in/mobilenoentry/ பார்த்து அறியலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, "மின்னகத்தை" 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். அப்படி குறைகளை தெரிவிக்கும் போதே, உங்கள் மொபைல் எண் மின்வாரியத்தின் இபி கனெக்சனுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களிடம் எந்த விவரமும் கேட்காமலேயே மின்சாரம் உங்கள் ஏரியாவில் எப்போது வரும், மின்தடை உள்ளதா என்பதை எளிதாக மின்வாரியத்தில் இருந்து கூறிவிடுவார்கள்.இதுதவிர மின்வாரியத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு மின்சார பில் இந்த மாதம் எவ்வளவு வந்துள்ளது என்பது எஸ்எம்எஸ் ஆக

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி, ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை.