Weather News

சென்னையில் கன மழை பெய்து வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ,விமான நிலையம் மூடல் .

 நேற்று வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என கூடியுள்ளது .அதன்படி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இந்த புயல் மழை காரணமாக சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஆகையால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

ஃபெங்கல் புயலாக மாறிவருகிற நிலையில் ,வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்று எச்சரிக்கை !

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று பெங்கல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது "X"  தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புயலாக மாறி நாளை (நவம் 30) பிற்பகல் 1மணி அளவில் கரையை கடக்க துவங்கும். ==> சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் அருகே புயலாகவே கரையை கடக்கும். ==> இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு தரைக்காற்றுடன் இன்று மழை பதிவாகும். ==> குறிப்பாக #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் அதித கனமழை பதிவாகும். சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ==> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (2.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (2.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

தீபாவளிக்கு இத்தனை மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுதா..? வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!

தீபாவளி தினமான நாளை தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், அதேபோல் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்படுகிறது.அதன்படி இன்று (30.10.2024) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.நாளை (31.10.2024): தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி,

நாளை தீவிர புயலாக வலுபெறும் 'டானா'..? தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (22-10-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை 5.30 மணி அளவில் புயலாக (டானா) வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில்  ஒரிசா தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 610 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.   இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி அதிகாலை வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது,

வானிலை மையம் எச்சரிக்கை | ரெட் அலெர்ட்... | Tamilnadu Rain News

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் நாளை (அக்டோபர் 15) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில்  நிலவுகிறது. 15ம் தேதிக்குள் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காளத்தின் மத்திய பகுதிகளில் ஆழமான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இது அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு திசையில் புதுச்சேரி மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள தெற்கு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது | வானிலை மையம் அலெர்ட்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் நாளை (செப்டம்பர் 28, 2024) இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.                                        Price And Models மற்றும் Shop Details பார்க்க  -  Click The Imageஅதேபோல், கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் நாளையும் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.source :Daily Thanthi

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,அரியலூர் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ,சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை , நெல்லை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, விருதுநகர் ,தேனி ,திண்டுக்கல், கோவை ,தென்காசி , திருப்பூர் , நீலகிரி , கன்னியாகுமரி , ஆகிய 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.source : DailyThanthi