Weather News

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது | வானிலை மையம் அலெர்ட்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் நாளை (செப்டம்பர் 28, 2024) இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.                                        Price And Models மற்றும் Shop Details பார்க்க  -  Click The Imageஅதேபோல், கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் நாளையும் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.source :Daily Thanthi

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,அரியலூர் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் ,சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை , நெல்லை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, விருதுநகர் ,தேனி ,திண்டுக்கல், கோவை ,தென்காசி , திருப்பூர் , நீலகிரி , கன்னியாகுமரி , ஆகிய 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.source : DailyThanthi