Tamilnadu News
சென்னையில் இருக்க கூடிய 7000 நகை கடைகள் இன்று மூடப்படுவதாக தகவல்
நேற்று வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என கூடியுள்ளது .அதன்படி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிற நிலையில் ,மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மொத்தமாக 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை....
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலமாக நிலவி வருவதால் ,தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் .இது வருகிற 30ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே காரையே கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் .மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(வெள்ளி) மற்றும் நாளை மறுநாள்(சனி ) என 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .
திருச்சியில் நாளை(5.11.2024) மின் தடை செய்யப்படும் பகுதிகள்! Trichy Power Shutdown Details
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மாததோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது .அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நாளை (5.11.2024) எந்த எந்த பகுதிகள் மின் தடை ஏற்படும் என்று தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில்,தமிழ்நாடு மின்சார வாரியம் கூறி உள்ளார்கள் .கீழ்கண்ட பகுதிகளில் நாளை (5.11.2024) மின் தடை :துவரங்குறிச்சி, செவந்தம்பட்டி, சதாவேலம்பட்டி, அதிகாரம்,ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம்பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியக்குறிச்சி, காரப்பட்டி, கல்லக்கம்பட்டி, வேல குறிச்சிட்டிக், கரடிப்பட்டி .EB சாலை பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், வெள்ளை வெற்றிலை காரா, தைல்கரா,பாபு RD,NSB RD,வாழக்கை மண்டி ,பூலோகநாதர் கோவில் தெரு ,சின்ன கடை வீதி,விஸ்வாஷ் என்ஜிஆர்,வசந்தா என்ஜிஆர்.மேலும் படிக்க : மக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கியமான வங்கியில் UPI சேவைகளை நிறுத்தப்போவதாக தகவல் வந்துள்ளது . எந்த வங்கி என்று பாருங்கள் !புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி,
தனித்து போட்டி... விஜய் போட்டியிடும் தொகுதி... தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?
மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராகவும், 3ஆவது மொழியை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் காலை முதலே கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரத் தொடங்கினர். காலை 10.15 மணியளவில் விஜய் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தார்.அதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியின் செயல் திட்டம், நிர்வாகிகள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில்
தீபாவளிக்கு களை கட்டிய மது விற்பனை.. எவ்வளவு கோடி லாபம் தெரியுமா..?இவ்வளவு கோடியா.......
பண்டிகைக் காலங்களில் மதுரை மண்டலத்தில் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதியில் ரூ.200 கோடியாக உயரும். மேலும் பண்டிகை நாட்களில் தினசரி விற்பனை 250 கோடியாக உயர்கிறது.இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ஆம் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ஆம் தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராண்டியே அதிகம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது.
தவெக முதல் மாநாடு... விஜய் பேசப்போவது என்ன? - வெளியான தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜயின் பேச்சு சினிமா மேடைப் பேச்சுகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிவித்தார். அதன் பிறகு கல்வி விருதுகள் விழா, கொடி அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு பேசினார். இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி நடக்க உள்ள தவெக முதல் மாநில மாநாட்டில் தன்னுடைய கட்சிக் கொள்கையை அறிவிக்க உள்ளார் விஜய். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers உள்ளார்கள் - உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .விஜயின் அரசியல் கொள்கை என்னவாக இருக்கும்? திராவிட அரசியலை கையில் எடுப்பாரா அல்லது தமிழ் தேசியம் பாதையில் பயணிப்பாரா என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய முதல் மாநாட்டில்
ரூ. 20 லட்சம் வரை கடன்.. அதுவும் 7% வட்டியில்..யாருக்கெல்லாம் கிடைக்கும் ? முழு விவரம் இதோ..!!
தென்காசி மாவட்டத்தில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் குறு நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியான தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியான 7 சதவீதம் வட்டிவிகிதத்தில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெற முடியும். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers - உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தகுதி: இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை பெறலாம்.இத்திட்டத்தில் கடன்பெற குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சமாக 65-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு தொழில்
பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! Rs.50 thousand scholarship for women!
தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு ரூ. 50,000 உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தையும் சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சமூக நலத்துறை சட்டமன்றத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது.இந்த ரூ. 50 ஆயிரம் கொண்டு, நடமாடும், உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில் செய்யலாம் என அறிவித்திருந்தது. இதற்காக மொத்தம் ரூ. 1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.Also Read : தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிரடி முடிவு?இதற்கான ஒப்புதல் எல்லாம் பெறப்பட்டு