
இன்ப செய்தி ....பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு ....
இந்த 2025ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றும் ,அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி திருவள்ளுவர் நாள் மற்றும் ஜனவரி 16-ம் தேதி உழவர் நாள் என்று தொடர்ச்சியாக விழாநாட்கள் கொண்டாடப்பட உள்ளது.இதனை தொடர்ந்து,தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை வரை அரசு விடுமுறை என்று அறிவித்திருந்த நிலையில் ,தற்போது தமிழ்நாடு அரசு மற்றும்மொரு இன்பச்செய்தியாக அடுத்த நாள் ஆன வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 17-ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவலை எங்களது NIBZ (நிப்ஸ்) நிறுவனத்தின் இணையதளம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம் . ஏற்கனவே தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி வியாழக்கிழமை வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்திருந்த