Tamilnadu News

ரூ. 20 லட்சம் வரை கடன்.. அதுவும் 7% வட்டியில்..யாருக்கெல்லாம் கிடைக்கும் ? முழு விவரம் இதோ..!!

தென்காசி மாவட்டத்தில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் குறு நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியான தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியான 7 சதவீதம் வட்டிவிகிதத்தில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெற முடியும். தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers -  உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .தகுதி: இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை பெறலாம்.இத்திட்டத்தில் கடன்பெற குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சமாக 65-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு தொழில்

பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! Rs.50 thousand scholarship for women!

தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு ரூ. 50,000 உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தையும் சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சமூக நலத்துறை சட்டமன்றத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது.இந்த ரூ. 50 ஆயிரம் கொண்டு, நடமாடும், உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில் செய்யலாம் என அறிவித்திருந்தது. இதற்காக மொத்தம் ரூ. 1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.Also Read : தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிரடி முடிவு?இதற்கான ஒப்புதல் எல்லாம் பெறப்பட்டு

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிரடி முடிவு?

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இது வியாழக்கிழமை என்பதால், பிறகு வெள்ளி ஒரு நாள் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்று தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களுக்கும் நவம்பர் 1ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.இதன்மூலம், வியாழன் (தீபாவளி), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் அரசு

கனமழையால் ஸ்தம்பித்த தவெக மாநாட்டின் பணிகள் | The Impact of Heavy Rain on TVK Event Planning

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்று மூன்று பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கவலையடைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்ற இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக, விழுப்புரம் - 25 மி.மீ., வளவனூர், அவலூர்பேட்டை - தலா 12 மி.மீ., கொளியனூர் - 10 மி.மீ., சூரப்பட்டு - 8 மி.மீ., மரக்காணம், அரசூர், திருவெண்ணெய்நல்லூர் - தலா 4 மி.மீ., முண்டியம்பாக்கம் - 3.50 மி.மீ., கஞ்சனூர் - 3.40 மி.மீ., கேதார், செஞ்சி. மாம்பூண்டி - தலா 3 மி.மீ., வளட்டி - 2.70 மி.மீ., செம்மேடு - 1.80 மி.மீ. விழுப்புரம்

இப்போது எப்படி இருக்கிறார் ரஜினிகாந்த்? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்? வெளியான புதிய தகவல்!

சென்னை : ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என , அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த நிலையில் அவரது உடல் நலன் சீராகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது நாளை மாலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து வேட்டையன் படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு நகரங்களுக்கும் அவர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் ரிலீஸ்

ரூ.9000 கோடி மதிப்பீட்டில் அமைகிறது டாட்டா மோட்டார்ஸ் ஆலை... அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தெற்காசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி ராஜா, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர், இந்திய இளைஞர்களுக்கே முன் மாதிரியாக திகழ்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.                                    Log inn Branded Mens Wear | Upto 50% Offer -  Whatsapp Number முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முன்வருவது அதிகரித்துள்ளதாகக் கூறிய

சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

சென்னை பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில் 1,420 பேருந்து நிறுத்தங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல நிறுத்தங்கள் உடைந்த கூரைகள், மோசமான இருக்கைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் பழுதடைந்துள்ளன. இதில், 700 நிறுத்தங்கள் ஒப்பந்தக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதில் மாநகராட்சி கட்டிப்பாட்டில் உள்ள 720 நிறுத்தங்களில் 149 நிறுத்தங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.அதில் முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் 3டி வடிவிலான நவீன நிழற்குடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்டமாக 12 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் உள்ள 81 பேருந்து நிறுத்தங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது. இந்த 3D பேருந்து

திருச்சியில் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தகமாகி இருக்கும் புதிய நிறுவனம்!!

அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 27-ம் தேதி இரவு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காச் சென்றார். இந்தப் பயணத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கூகுள், மைக்ரோசாஃப்ட் தொடங்கி ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் BNY மெலான் நிறுவனம் வரை தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இதற்கிடையே, தனது அமெரிக்க பயணத்தின் 18ம் நாளான இன்று காலை தமிழகத்துக்கு மிக நல்ல செய்தியை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஜேபில் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருக்கும் செய்தியை அவர் வெளியிட்டார்.ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது.திருச்சியில் ஜேபில்

சென்னை F4 கார் பந்தயத்தில் காவலர் மரணம்??

சென்னையில் தற்போது பார்முலா 4 கார் பந்தயம் கலைக்கட்டியுள்ளது.இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்துகிறது.இந்த பந்தயமானது சென்னை தீவுத்திடலைச் சுற்றி மூன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, உடன் இருந்த காவலர்கள், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நிவாரணம்  அறிவிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ. 25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p           இதை பற்றிய