Tamilnadu News

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை, நாகப்பட்டினம் செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இந்து 15 நாட்டிகல் தென்கிழக்கே கடலில் நேற்று இரவு மீன்பிடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கட்டையால் மீனவர்களை கடுமையாக தாக்கினர். மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றனர். கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் முருகன் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து, அவரை மீட்ட சக மீனவர்கள் முருகனை நாகைப்பட்டனம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.source : https://www.dailythanthi.com/News/State/sri-lankan-pirates-attack-nagapattinam-fishermen-1103781?infinitescroll=1

ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னை, தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.640 உயர்ந்து ரூ.54,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .source:https://www.dailythanthi.com/News/State/today-gold-rate-in-chennai-1101850

திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். தேரோட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .source : https://www.dailythanthi.com/News/State/today-is-a-local-holiday-for-trichy-district-1101834

பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி பா.ஜ.க.,வில் இணைந்தார்

சென்னை, நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே ஆச்சி மனோரம்மா, கோவை சரளா,வித்யுலேகா, ஜாங்கிரி மதுமிதா போன்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தியும் ஒருவர். ஆரத்தி ரவி என்ற ஆர்த்தி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கணேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக இணைந்த நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அவரது மறைவிற்கு பின் அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார். தொடர்ந்து சினிமாவில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில், நடிகை ஆர்த்தி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஆர்த்தியின் கணவர் கணேஷ் பா.ஜ.க.,வில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.இதை பற்றிய உங்களது கருத்தை COMMENT செய்யவும் .source :https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/famous-comedian-aarti-joined-bjp-1100891

அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன் காலமானார்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.source:https://www.dailythanthi.com/News/State/former-admk-mla-aks-anbalagan-died-in-peranamallur-1100722

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்

விழுப்புரம், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.source:https://www.dailythanthi.com/News/State/vikravandi-dmk-mla-pugahendi-passed-away-1100478?infinitescroll=1

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு

சென்னை, நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.source:https://www.dailythanthi.com/News/State/sudden-suspension-of-fare-hike-at-toll-booths-1099752

அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியானது

சென்னை, சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படம் வெளியாவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள்

வேட்டையாடு விளையாடு பட நடிகர் டேனியல் பாலாஜி மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை, கமல்ஹாசன் கதாநாயகராக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி (வயது 48). இவர் பொல்லாதவன், காக்க காக்க,பைரவா உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதை பற்றிய உங்களது இரங்கலை COMMENT இல் தெரிவிக்கவும். source:https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/actor-daniel-balaji-died-due-to-heart-attack-1099424