Tamilnadu News

தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு,கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ம.தி.மு.க. எம்.பி., கனேசமூர்த்தி திடீரென மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலை 5.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதை பற்றிய உங்களது கருத்தை COMMENT செய்யவும் .source:https://www.dailythanthi.com/News/State/mdmk-tried-to-commit-suicide-mp-ganesamurthy-died-without-treatment-1099159

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? அல்லது பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில், குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை நிறுத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டின் நகலை இணைத்து தனது

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை - தண்டனை நிறுத்தி வைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருவருக்குமான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.இன்று நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ பொன்முடி மற்றும் அவரது மனைவி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி,இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜரானர். கோர்ட் அளித்த தண்டனை விவரங்களும் முக்கிய நிகழ்வுகளும் வருமாறு:-அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் வயதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார். பொன்முடி மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பொன்முடியின் மனைவியும் தனது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என பொன்முடியிடம் நீதிபதி கேட்டார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று