Educational News

தமிழ்நாடு அரசு அதிரடி!மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் ......

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வேண்டி பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற மத்திய அரசை சார்ந்த  கல்வி நிறுவனங்களில் கல்வி பயில கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை (BC, MBC, DNC) சார்ந்த மாணவ மாணவிகள் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு குறைவாக இருக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணங்கள்  ஆகிய கட்டணங்களுக்கு மாணவர்களால் செலுத்தப்பட்ட கட்டணம் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வித் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கல்வித் தொகை 2024-2025ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் பெற விண்ணப்பிப்பதற்கு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை, நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா். குரூப் 2 தோ்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.Source: DailyThanthi