ஓய்வு குறித்து சென்னை அணியின் நிர்வாகிகளிடம் தோனி கூறியது என்ன..? வெளியான தகவல்

111 News > National News

                                                                       

                                                                         

                     Products பார்க்க Click The Link : https://nibz.in/products/filtercategory=&district=&scategory%5B%5D=&keyword=3+seater+sofa+in+trichy

சென்னை, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிளே ஆப் போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளன.

                                                                      

                    Clik The Link For Shop Details  : https://nibz.in/listings/item/3314

இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்று வாய்ப்பை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மேலும் இந்த சீசனே சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த சீசனுக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். அத்துடன் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது ரசிகர்களின் அன்பிற்காகவும் ஆதரவிற்காகவும் மேலும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று தோனி அறிவித்திருந்தார். தற்போது சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? அவர் எப்போது ஓய்வை அறிவிப்பார்? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

                                                                  

                                      CLICK TO SHOP : https://nibz.in/listings/item/55

இந்நிலையில் நடப்பு சீசனில் சென்னை அணியின் கடைசி போட்டி முடிவடைந்த பின்னர் தோனி சி.எஸ்.கே. நிர்வாகிகளிடம் தனது ஓய்வு குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் முடிவடைந்த பின்னர் சென்னை அணியின் நிர்வாகிகளிடம் பேசியுள்ள தோனி,

"அவர்களிடம் இன்னும் ஒரு சில மாதங்கள் (3 மாதங்கள்) கழித்து என்னுடைய ஓய்வு குறித்தான முடிவை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதுவரை எனக்கு அவகாசம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



இதை பற்றிய உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும் .


source :https://www.dailythanthi.com/Sports/Cricket/what-did-dhoni-say-to-the-executives-of-the-chennai-team-about-retirement-released-information-1106475