
மேஷம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும் , தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளிக்கும் திறமை உண்டு .
அவசரத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இன்று உங்களுக்கு ஆதாயமான நாள் என்றாலும் , நம்பிக்கையான ஒருவர் கைவிடுவார்.
இன்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். திருமண வாழ்க்கையில் சில மன வருத்தங்கள் ஏற்படுகூடும் .
ரிஷபம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
உங்கள் நேரத்தை கவனிக்கவிட்டால், அது உங்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்பட்டாலும் நீங்கள் இருவரும் அதனை திறமையாக சமாளிக்கும் குணமுடையவர்கள் .
மிதுனம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைத்து , சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படகூடும் . வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும் . நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் சுமுகமாக முடியும்.
கடகம் ராசிபலன்- (Tuesday, July 9, 2024)
சில ஏழைகளுக்கு பணம் கொடுப்பதன் மூலம் இன்று நீங்கள் நிம்மதியாக இருக்க கூடும் . நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்ய வேண்டும். இன்று உற்சாகமாகக் காணப்படகூடிய நாளாகும் . உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.
சிம்மம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
தேவையான பணம் கையில் இருக்க வாய்ப்பு உள்ளது . காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடும் திறமை உள்ளது . இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க கூடும் . தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தர கூடியதாக அமையும் . உங்கள் தந்தையிடமிருந்து எந்தவொரு ஆலோசனையும் இன்று தொழில் துறையில் உங்களுக்கு பயனளிக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள்.
கன்னி ராசிபலன் (Tuesday, July 9, 2024)
தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படலாம் . குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது . உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது . அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது ரொம்ப நல்லது .உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக அமையும் . கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக உணர்வீர்கள் . உங்கள் அன்பானவருக்கு உங்கள் வார்த்தைகள் புரியவில்லை என்று நீங்கள் நினைத்தால், இன்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவது நல்லது ஏனென்றால் , உங்கள் விஷயங்களை தெளிவுடன் அவர்களுக்கு முன் வைக்க முயற்சி செய்யலாம் .
துலாம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
குடிக்கும்போதும் சாப்பிடும்போதும் கவனமாக இருங்கள். அக்கறையின்றி இருந்தால் நோயில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது . இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள் . நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாளாக இன்று உங்களுக்கு அமையும் .
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்தாலும், எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தர கூடிய நாள் . பிள்ளை களின் விருப்பத்தை இன்று நீங்கள் நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
உங்கள் பயத்தைப் போக்கியாக வேண்டிய நாள் இது. அது உடல் இயக்கத்தை குறைக்கிறது என்பது மட்டுமின்றி ஆயுளையும் குறைக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். சூதாட்டத்தில் முதலீடு செய்தவர்களின் பணம் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உண்டு. நீங்கள் சூதாட்டத்திலிருந்து தள்ளிஇருப்பது நல்லது . நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . ரொமான்ஸ் வாய்ப்பு இருந்தாலும் , உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு ஏற்படலாம் .எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பான நாளாகும் . கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் சிறந்த நாள் . பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் , விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் ,அதில் இருந்து விலகிச்செல்வீர்கள் .
தனுசு ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
எதிர்பார்த்த பணம் கிடைத்தாலும் , திடீர் செலவுகளால் பணம் கரையும். பிற்பகலுக்கு மேல் நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்பட கூடும் . குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் உங்களை வெகுவாக பாராட்டவும் செய்வார்கள். நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக நடந்துக்கொள்ள வேண்டும். திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைய கூடிய நாளாகும் இன்று .
மகரம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
உங்களின் ஜாலியான இயல்பு மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும் . உங்கள் வீட்டில் விழா நடைபெறுவதால் இன்று நீங்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கலாம் , இதனால் உங்கள் அடிப்படை சூழ்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது . குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக நடந்துக்கொள்ள வேண்டும். காதலில் ஏமாற்றம் வந்தாலும் , காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்பட கூடும் . உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி நேரிடலாம் .
கும்பம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாளாக இன்று அமையும் . தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்பட கூடும் . பெரும்பாலான நேரம் வீட்டு வேலையில் பிசியாக இருந்தாலும் கூட ,சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். உங்கள் ஐடியாக்களை நன்கு வெளிப்படுத்தி வேலையில் உறுதியையும் ஆர்வத்தையும் காட்டினால் - ஆதாயம் பெற அதிகளவில் வாய்ப்பு உள்ளது . விளையாட்டு வாழ்க்கையில் முக்கியமாகும் ஆனால் விளையாட்டிலியே முழு பிஸியாக இருந்து விட்டால் , உங்கள் படிப்பு பாதிக்கபட கூடும் .
மீனம் ராசிபலன் - (Tuesday, July 9, 2024)
உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஒரு பிரச்சனையாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். அது உடனடியாக உங்களைக் கொல்கிறது - வாழ்வில் ஆனந்தத்தை கெடுத்து திறமையை பாதிக்கிறது - எனவே உங்களை கோழையாக ஆக்கிவிடுவதற்கு முன்பு, முளையிலேயே கிள்ளிவிடுவது நல்லது . நீங்கள் ஒரு மாணவராக இருந்து வெளிநாட்டில் படிக்க விரும்பினால், வீட்டிலுள்ள நிதி நெருக்கடி இன்று உங்கள் நெற்றியில் சுருக்கத்தை ஏற்படுத்தும். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். ஆதிக்கம் செலுத்தும் நபர்களுடன் இருக்கும்போது உங்கள் தொழிலில் பெரிய நல்ல மாற்றங்களை செய்வீர்கள். பணம், அன்பு, குடும்பம் ஆகியவற்றிலிருந்து விலகி, இன்று நீங்கள் இன்பத்தைத் தேடி ஒரு ஆன்மீக ஆசிரியரைச் சந்திக்க செல்லலாம்.
உங்களது ராசி பற்றிய கருத்தை பதிவிடவும் .