
மன அழுத்தம் என்பது, மனிதனின் வாழ்வில் இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகளவிலும் மற்றும் சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவானவைகளில் ஒன்று. பல காரணங்களால் ஒரு மனிதனுக்கு மனஅழுத்தம் என்பது ஏற்படக்கூடும் . தன் சுற்றுப்புறத்தாலும் ஏற்படலாம், நம் அதிக சிந்தனையாலும் மனஅழுத்தம் ஏற்படலாம் .
நாம் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் மன அழுத்தத்தை நெகடிவாக பார்க்க வேண்டாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கு, ஒரு விஷயத்தைக் பற்றி பயப்படும் போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆகவே, நமக்கு இது ஒரு எச்சரிக்கை என கருதி, எதைக் பற்றி நாம் பயப்படுகிறோமோ, அதை எப்படி சரி செய்வது,என்கின்ற எண்ணத்தை செலுத்த வேண்டும்.
மனஅழுத்தத்திற்க்கான அறிகுறிகள் :
1.அவரது சுவாசம் பாதிப்படையும்.
2.மூச்சு விடுவதற்கு சிரமப்படுவர்
3.ரத்த ஓட்டம் சீராக இருக்காது
4.மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும்
மன அழுத்தத்தால் தசை மற்றும் எலும்பு பகுதிகளும் பாதிப்பு ஏற்படலாம் . பொதுவாகவே உடலின் சதைப் பகுதி, உடலின் உட்புற பாகங்களை பாதுகாக்கும் . ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் தசைப் பகுதிகள் வலுவிழந்தும் மற்றும் தோள்பட்டை, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி ஏற்பட கூடும் . தலைவலி அதிகமாக இருக்கும்.
மன அழுத்தத்தினால் இரத்த ஓட்டம் அதிகமாகலாம். மனம் திரும்ப பழைய நிலைக்கு வந்துவிட்டால், தானாகவே சரியாகிவிடும். ஆனால் தொடர்ந்து ஒரு நபர் ஒரே விஷயத்தாலோ அல்லது ஒரே அளவில் மன அழுத்தத்தில் இருந்தால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தத்தினால் நாளமில்லா அமைப்பு பாதிக்கப்படும். நாளமில்லா அமைப்பு உடலில் அதிக வேலை செய்கிறது. சிந்தனை, திசுக்களின் செயல்பாடுகள், மெட்டாபாலிஸம் இதனால் பாதிக்கப்படும். மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், நாளமில்லா அமைப்புடன் நரம்பு மண்டலத்தை இணைக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது இதுதான் கார்டிசோலை தூண்டுகிறது.
*மன அழுத்தம் ஏற்படும்போது இரைப்பை குடலில் பாதிப்புகளும் ஏற்படும். சரியான செரிமான இருக்காது. மன அழுத்தத்தின் போது உணவுப் பழக்கம் மாறும். அதை இரைப்பை ஏற்காது. இதனால் வயிறு வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
*மன அழுத்தத்தின் விளைவாக இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படும். தொடர் மன அழுத்தத்தால் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் ஸ்பெர்ம் உற்பத்தியாவது பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும்'' என்றார்.
கை கொடுக்கும் யோகா
தியானம், யோகா, அக்குபஞ்சர், இசை, மசாஜ் மற்றும் நறுமணபொருள், ஊட்டசத்துள்ள உணவுகள் ஆகியன மூலமும் குணப்படுத்தலாம். தியானம் என்றால் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் நிதானமாக மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக ஒரே ஒளி, ஒலி மந்திர குறிப்பிட்ட ஒரு பிம்பத்தின் மீது மனதை குவிய செய்தல். யோகா, தியானத்துடன் உடலை சில நிலைகளில் அமர செய்து மூச்சுப்பயிற்சியுடன் உடல் எடையை மறந்து ரிலாக்சாக்குதல் மூலம் நல்ல மாற்றம் வருகிறது.
உடலை தடவுதல்
மசாஜ் மூலம் உடல் பாகங்களை தடவும் முறையால் ரிலாக்ஸ் கிடைக்கும். மானசீகமாக தடவும் போது மனமும் உடலும் தொடர்புக்குள்ளாகிறது. உடல் சுகம் கிடைக்கிறது. ஆவேசம், தீவிர உணர்ச்சி அழிக்கிறது.
இசை
மருந்தில்லாமல் அனைத்து வயதினருக்கும் இசை மூலம் கோபம், அழுத்தம், கவலையை போக்கலாம்.
அக்கு பஞ்சர்
அக்கு பஞ்சர் எனும் நுண்ணிய ஊசிகளை குறிப்பிட்ட இடங்களில் தோலின் உள் செலுத்தி உடல் வலி, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் உள்ளவர்கள் மீன் எண்ணை (ஒமேகா 3), விட்டமின் பி6, பி12, விட்டமின் சி மற்றும் டி ஆகியவை கொண்ட உணவுகளையும், இரும்பு, சுண்ணாம்பு, மெக்னீசிய சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுக்கலாம்.
செரேட்டோனின் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும். செரேட்டோனின் குடலில் 90 சதவீதமும், மூளை மற்றும் ரத்தத்தில் 10 சதவீதமும் இருக்க வேண்டும். உறக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரேட்டோனின் குறைந்தால் கோபம், தற்கொலை எண்ணம் வரும். சத்துக்கள் இல்லாத உணவு செரோட்டோனின் அளவை குறைக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செரோட்டோனின் அளவை அதிகரிக்க செய்து ரத்தத்தினை சீராக ஓடச் செய்து தசைகளை உறுதிப்படுத்துகிறது. நல்ல சிந்தனை ஓட்டம் மற்றும் அன்பு மலரச் செய்கிறது. பருப்பு, பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணெய், புளித்த உணவுகள் மனஅழுத்தத்தை குறைக்கும்.
மனஅழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது?
நம் அன்றாட வாழ்க்கை முறைகளை நாம் முறையாகத் திட்டமிட்டுக்கொள்ளும்போதும், நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய அளவில் நாம் முழுத் தயாரிப்புடனும் அதற்குரிய முன்னேற்பாடுகளுடனும் இருக்குமாறு நாம் நமது தினசரி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதன் வழியாகவும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ளலாம். நமது பெரும்பாலான நேரத்தை நமது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவே செலவழிக்கிறோம். இதனால், நமது அத்தியாவசியத் தேவைகளுக்காக நாம் செலவிடும் நேரம் குறைந்து அவற்றை சரிவர முடிக்க முடியாத நிலை உருவாகிறது. அத்தியாவசியத் தேவைகளில் ஏற்படும் இந்த இழப்பு, நம்மைப் பதற்றப்பட வைக்கிறது, அது தினசரி வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அதன் வழியாக இயலாமையும் நம்பிக்கையின்மையும் தோன்றுகிறது, அது மேலும் பல நெருக்கடிகளை உருவாக்குகிறது. இது போன்ற, சரியாகத் திட்டமிடாத தினசரி வாழ்க்கைதான் நாம் எந்த நேரமும் மனஅழுத்தத்துடன் இருப்பதற்கு முக்கியமான காரணமாகிறது.
மனஅழுத்தம் பிரச்சினையாகாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது?
சரியான திட்டமிடுதலுடன் கூடிய அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
சக மனிதர்களுடன் ஆழமான, ஆரோக்கியமான உறவைப் பேண வேண்டும்.
மனிதர்களை அவர்களின் குறைகளுடன் ஏற்றுக்கொண்டு, அவர்களின் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு, இணக்கமாக இருக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உணர்வுகளைப் பக்குவமாக, முதிர்ச்சியுடன் கையாள வேண்டும். முக்கியமாக, மிதமிஞ்சிய நமது உணர்வுகளால் நாமோ மற்றவர்களோ பாதிக்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் எதிர்பாராத தருணங்களில் சோர்ந்துபோகாமல் அதை எதிர்கொள்வதற்கான அத்தனை முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான நேரத்தில் தூக்கம், சரியான நேரத்தில் உணவு, போன்ற ஒழுங்குடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பச் சாதனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் ஆக்கபூர்வமான நேரத்தைச் செலவிட வேண்டும்.
சமூக வலைதளங்களில் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும்.
மது, புகையிலை போன்ற போதைப் பழக்க வழக்கங்களை மனஅழுத்தத்திலிருந்து மீளும் வழியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
நம்மையும் மீறி நாம் பதற்றமாக இருக்கிறோம் என உணரும்போது, அதற்கான ஆலோசனைகளைப் பெறத் தயங்கக் கூடாது.
நவீன கால வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கம். அதை நாம் ஒரு நோயாகக் கொள்ளத் தேவையில்லை. அதைச் சரியான வகையில் எதிர்கொண்டு மீண்டுவந்தால் போதுமானது. அப்படி மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில்தான் மனஅழுத்தம் ஒரு நோயாக மாறுகிறது. மனிதர்கள் அனைவருக்கும் மனஅழுத்தத்திலிருந்து மீண்டுவருவதற்கான ஆற்றல் இயல்பிலேயே இருக்கிறது. அதனால் மனஅழுத்தத்தைக் கண்டு சோர்ந்துபோகாமல் அதைச் சரியான வகையில் எதிர்கொள்ளும் திறன்களையும் வாழ்க்கை முறையையும் அமைத்துக்கொண்டாலே போதுமானது.