
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமானது, அதானி குழுமம் மீதும் மற்றும் செபி மீதும் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின அதானி குழுமத்தின் பங்குகள் 3-7 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தன.
Price And Models பார்க்க Click The Images
அதானி குழுமம் முறைகேடு புகார் தொடர்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான (செபி) தலைவர் மதாபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறார். எனவே அதன் குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை' என்று அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ் சாட்டி இருக்கிறது . 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; இது உள்நோக்கம் கொண்டவை' என செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது.
Price And Models பார்க்க Click The Images
அதேபோல், இன்று (ஆகஸ்ட் 12) பங்குச்சந்தை இறக்கத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 436.45 புள்ளிகள் சரிந்து 79,269.45 புள்ளிகளாக வர்த்தகமாகின. நிப்டி 142.3 புள்ளிகள் சரிந்து 24,225.20 புள்ளிகளாக வர்த்தகமாகின.
இதனையடுத்து , ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி
குழுமத்தின் பங்குகள் 7 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தன. அந்த வகையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி எனர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவைக் கண்டுள்ளது.