
சவூதி அரேபியா :
ஆறுகள் இல்லாத மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும் இந்த நாடு கடல் நீரை குடிநீராக மாற்றுகிறது. 70 சதவீத குடிநீர் உப்புநீக்கம் செய்யப்பட்டு சுத்திகரித்து கிடைக்கிறது. மேலும், இங்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், சுத்தீகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
கத்தார் : உலகிலேயே பணக்கார நாடாக இருந்தாலும், நதிகளை எங்கும் உருவாக்க முடியாது. எனவே இந்த நாடும் கடல் நீரை சுத்தம் செய்துதான் குடிநீராக பயன்படுத்தி வருகிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீர் நுகர்வைக் கொண்டுள்ளது, எனவே இங்குள்ள குடிநீர் 99 சதவீதம் உப்பு நீக்கம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : துபாய், அபுதாபி போன்ற உலகின் பணக்கார மற்றும் பிரபலமான நகரங்கள் இந்த நாட்டில் உள்ளன. நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்கிறார்கள், ஆனால் இந்த நாட்டிலும் நதிகள் இல்லை. இதனால் கடல் நீரை சுத்தீகரித்து மட்டுமே குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் அழுக்கு நீர் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
குவைத்: அரேபிய வளைகுடாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குவைத் நாட்டிலும் ஆறுகள் கிடையாது. இங்கும் கடல் நீர் சுத்தீகரிக்கப்பட்டு, மற்ற நாடுகளை போலவே உப்பு நீர் சுத்தகரீக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.
மாலத்தீவுகள் : இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட சுற்றுலாவை மையமாக கொண்டுள்ள நாடு மாலத்தீவு. இந்த நாட்டில் ஒரு நதி கூட இல்லை.ஆனால், மேற்கூறிய அரபு நாடுகளைப் போல் இந்த நாடு வளமான நாடக இல்லை. ஆதலால் இங்கு குடிநீர் சேகரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீரை சேமித்து, ஆலையில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து, பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்வதே இங்கு ஒரே தீர்வாக கூறப்படுகிறது .
பஹ்ரைன் : தீவு நாடான பஹ்ரைனில் இங்கும் ஆறுகள் இல்லை, ஆனால் பல வகையான நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீரூற்றுகள் இருந்தும் antha தண்ணீர் குடிப்பதற்கு போதுமானதாக இல்லாததால், கடல்நீர் சுத்தீகரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.
வாடிகன் சிட்டி : உலகிலேயே மிகச்சிறிய சுதந்திர நாடான வாடிகன் நகரில் கூட ஆறுகள் ஓடுவதில்லை. இந்த நாடு குடிநீருக்கு இத்தாலிய நீர் விநியோகத்தை தான் நம்பியுள்ளது.
ஓமன் : அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓமான் நாட்டிலும் நிரந்தர நதி இல்லை. இருப்பினும், பல பள்ளத்தாக்குகள் உள்ளன, அங்கு மழைக்காலத்தில் தண்ணீர் ஆறுகளை உருவாகிறது. தண்ணீரைச் சேமிப்பதற்காக பல்வேறு விவசாய தொழில்நுட்பங்களை அந்நாடு பின்பற்றி வருகிறது
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p