எதிர்பாராத அதிரடி சலுகையை அறிவித்த பிரபல விமான நிறுவனம்!!

118 News

இந்த ஆண்டு இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஃபிரீடம் சேல் என்ற சலுகையை அறிவித்துள்ளது. அனைத்து கேபின் வகுப்புகளிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு விஸ்தாரா விமான நிறுவனம் தள்ளுபடி கட்டணங்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.

                                                                                     

         AL Parvez Air Travels - Ticket Booking சம்பத்தப்பட்ட சேவைகளுக்கு - 9865598061

பாக்டோக்ரா ------> திப்ருகர் வரை பயணிக்க எகனாமி வகுப்புக்கு ரூ.1,578 ஆகவும், மும்பை --------> அகமதாபாத் வரை செல்லும் பிரீமியம் எகனாமி வகுப்பிற்கு ரூ.2,678 ஆகவும், மும்பை -------> அகமதாபாத் வரையிலான வணிக வகுப்பிற்கு ரூ.9,978 ஆகவும் உள்நாட்டு ஒருவழிக் கட்டணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாக்டோக்ரா ------> திப்ருகர் வரை பயணிக்க எகனாமி வகுப்புக்கு ரூ.1,578 ஆகவும், மும்பை --------> அகமதாபாத் வரை செல்லும் பிரீமியம் எகனாமி வகுப்பிற்கு ரூ.2,678 ஆகவும், மும்பை -------> அகமதாபாத் வரையிலான வணிக வகுப்பிற்கு ரூ.9,978 ஆகவும் உள்நாட்டு ஒருவழிக் கட்டணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

           Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p


இத்தள்ளுபடியைப் பெற, பயனர்கள் அக்டோபர் 31 வரை பயணம் செய்ய ஆகஸ்ட் 15 ஆம் தேதி 23:59 மணி நேரத்திற்குள் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த்க்கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விஸ்தாராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.airvistara.com மூலம் விஸ்தாராவின் iOS மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்பாடுகள், விஸ்தாராவின் விமான டிக்கெட் அலுவலகங்களில் (ATOக்கள்), விஸ்தாராவின் அழைப்பு மையங்கள், ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள் (OTAகள்) மற்றும் பயண முகவர்கள் மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு கொள்ளலாம்.


                                                                          

எந்தெந்த நாடுகளுக்கு  செல்லும் பயனாளிக்கு இந்த சலுகை பயன் பெரும் ?

அபுதாபி, பாலி, பாங்காக், கொழும்பு, தம்மாம், டாக்கா, துபாய், தோஹா, பிராங்பேர்ட், ஹாங்காங், ஜெட்டா, காத்மாண்டு, லண்டன், மாலே, மொரிஷியஸ், மஸ்கட் மற்றும் சிங்கப்பூர், பாரிஸ் போன்ற சர்வதேச இடங்களுக்கு செல்பவர்கள்  மட்டுமே இந்த தள்ளுபடியைப் பெற முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே தள்ளுபடி கட்டணங்கள் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையின்படி  இந்த சலுகையை பெற இயலும் எனவும், மேலும் அணைத்து இருக்கைகளின் புக்கிங் முடிந்தால்  வழக்கமான கட்டணங்கள் பொருந்தும். இந்த சலுகையை மற்ற வவுச்சர்கள், தள்ளுபடிகள் மற்றும் விஸ்தாரா நேரடி பலன்களுடன் இணைக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.