
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சுங்கச்சாவடிகள் கட்டணம் திடீர் உயர்வு என்று இங்கே பார்ப்போம்.
வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு முறை அதாவது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் சுங்க சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலினால் ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை, இதற்கு மாறாக கடந்த ஜூன் மாதம் 36 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
Click This Image To Contact The Shop
எனவே கீழ்வரும் இடங்களில் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்று கூறப்படுகிறது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .