இலவசமா?? அப்போ உடனே இத பண்ணுங்க ஆதார் கார்டின் புதிய அப்டேட் !! | New Aadhaar Card Update

296 News > National News

இந்திய மக்களின் முக்கியமான அடையாளமே ஆதார் கார்டு தான். தற்பொழுது செப்டம்பர் 14 வரை இந்த இலவச அப்டேட் ஒன்றை வீட்டில் இருந்தே செயலி மூலம் செய்யுமாறு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

                         

பத்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த ஆதார் கார்டினை புதுப்பித்தல் அவசியமாகும்.ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையமும் (UIDAI) ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது.

உங்கள் ஆதார் கார்டில் பெயர், குடும்பப் பெயர் போன்றவற்றை பெயர் சேர்க்க விரும்பினாலோ அல்லது வீட்டு முகவரியை மாற்ற விரும்பினாலோ அதை உடனே செய்யலாம். செப்டம்பர் 14 இதற்கான அவகாசம் உள்ளதால் அதற்கு முன் உங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம் இதை எதையுமே எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே எந்த கட்டணமும் செலுத்தாமல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.


                                                                               

ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டுமல்லாமல், MyAadhaar செயலி மூலமாகவும் குடும்பப் பெயரைப் புதுப்பிக்கலாம்.

மேற்கொண்டுள்ள செயலி மூலம் அல்லது ஆதார் வெப்சைட் இல் உல் நுழைந்து அதில் கேட்கும் அனைத்தையும் நிரப்பம் செய்து முடித்த பிறகு 90 நாட்களுக்குள் உங்கள் பெயர் அல்லது குடும்பப் பெயர் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் வீட்டிலிருந்து அருகிலுள்ள சேவை மையத்திற்குச் சென்று உங்கள் ஆதார் அட்டையைப் பெறலாம்.


Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .