அமெரிக்கா, சீனா வை பின்னுக்கு தள்ளிய குட்டி நாடு எதுன்னு தெரியுமா!!

48 Blog

உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா தான் என்றும் முதலிடம் பதிக்கும் ஆனால் கடந்த 2010 முதல் 2023 வரையிலான 13 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடிக்க வில்லை . உண்மையில், மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய ஆசியாவை சேர்ந்த கஜகஸ்தான் கடந்த 13 ஆண்டுகளில் யாரும் எதிர்பாக்காத நிலையில் அதிக செல்வதை எட்டியுள்ள நாடாக வளர்ந்துள்ளது.

அந்தந்த நாட்டில் உள்ள குடும்பங்களுக்குச் சொந்தமான நிதிச் சொத்துக்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையானது  கணக்கிடப்பட்டுள்ளது.இதன்படி, கடந்த 13 ஆண்டுகளில் கஜகஸ்தான் நாட்டின் செல்வம் 190 சதவீதம் அதிகரித்துள்ளது. கஜகஸ்தானில் கிடைக்கும் எண்ணெய், யுரேனியம் போன்ற இயற்கை வளங்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக  ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சியின் காரணமாக தான் பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

சீனா இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த 13 ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் செல்வ விகிதம் 185% அதிகரித்துள்ளது. கத்தார் மூன்றாம் இடத்திலும், இஸ்ரேல் நான்காம் இடத்திலும் இந்தியா இப்பட்டியலில் 133 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா இப்பட்டியலில் 8வது இடம் வகிக்கும் நிலையில் தற்பொழுது இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.



Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .