
சென்னையில் தற்போது பார்முலா 4 கார் பந்தயம் கலைக்கட்டியுள்ளது.இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்துகிறது.இந்த பந்தயமானது சென்னை தீவுத்திடலைச் சுற்றி மூன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, உடன் இருந்த காவலர்கள், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிவாரணம் அறிவிப்பு :
முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ. 25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .