
வேலை வாய்ப்பு, வெளிநாட்டு வேலை, சம்பள உயர்வு பெறப்போகும் ராசிகள்.
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என ஜோதிடர் கிருஷ்ணகுமார் பார்கவா கணித்துள்ளார்.
மேஷம் : இவர்களுக்கு கணபதியின் அருள் மழை பொழியும். கடின உழைப்பு மற்றும் உங்களின் அர்ப்பணிப்பு பாராட்டப்படும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் நிதிநிலை மந்தமாக இருந்த நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் : இவர்களுக்கு அவர்கள் காண விரும்பிய இலக்குகள் நிறைவேறும். எல்லா துறைகளிலும் அங்கீகாரமும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதையை உயர்த்தும் நாளாக அமையும். பண முதலீடு லாபகரமாக அமையும். வெற்றி, உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
கடகம் : இவர்களுக்கு பொருளாதாரத்தில் மந்தம் காணப்பட்ட நிலையில் இப்போது முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். கடினமான இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள்.
கன்னி : இவர்களுக்கு வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். தொழில், உறவுகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் வெற்றிகள் காத்துக் கொண்டிருக்கிறது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் பாராட்டப்படுவீர்கள். தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கின்றது. தடையில்லா வெற்றி கைக்கூடும் நன்னாளாக அமைகின்றது.
விருச்சிகம் : இவர்களுக்கு பணமழை பொழிவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. குடும்பச் சொத்துக்களால் ஆதாயம் காணுவீர்கள். சொத்துக்கள் மற்றும் செல்வ வளம் பெருகும்.
தனுசு : இவர்களுக்கு படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையில் விரும்பத்தக்க முடிவுகள் எடுக்கும் நல்ல நேரமாக இருக்கிறது. வெளியூர் பயண வாய்ப்பு வரலாம். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை சமாளிப்பீர்கள். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.
மகரம் : இவர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. பணி மாறுதலுக்கான பொன்னான வாய்ப்பு ஏற்பட கூடும். வேலையில்லாதவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டாகலாம். பணத்தை கையாளும் போது கூடுதல் கவனம் தேவை.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .