தந்தை உயில் எழுதவில்லை என்றால் திருமணமான பெண்ணுக்கு அந்த சொத்தில் பங்கு கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

191 Blog

அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையா என்பதைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், திருமணம் ஆனாலும் சரி, திருமணமாகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கும், பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் உரிமை இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 

source : https://tamil.news18.com/trend/can-a-married-woman-get-a-share-in-the-property-if-the-father-does-not-write-a-will-2-1582690.html