மனைவி ஆர்த்தியை பிரிய என்ன காரணம்? - நடிகர் ஜெயம்ரவி சொன்ன விளக்கம் இதுதான்!

54 News > Cinema News

மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் ஜெயம் ரவி, நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகே ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆர்த்தியை பிரியும் முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும், தன்னை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது தனியுரிமையையும், தனக்கு நெருக்கமானவர்கள் தனியுரிமையையும் மதிப்பளிக்கும் படியும் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

விவாகரத்து முடிவு தனது சொந்த முடிவு என்றும், நடிப்பின் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்பதே தனது முன்னுரிமை எனவும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.


Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 


Source : https://tamil.news18.com/