
நாட்டில் எஸ்யூவி-க்களின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 2024-ல், எஸ்யூவி செக்மென்ட் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 55%ஆக இருந்ததே இதற்கு சாட்சி. கடந்த மாதம் நாட்டில் அதிகம் விற்பனையாகிய 10 கார்களில் ஆறு SUV-க்கள் இடம்பெற்றுள்ளன.
அதே நேரத்தில் இந்த பட்டியலில் இருக்கும் SUV அல்லாத மாடல்கள் அனைத்தும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவை. ஆகஸ்ட் 2024-ல் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த டாப் 10 கார் மாடல்களில் 6 SUV-க்களை தவிர, 3 ஹேட்ச்பேக் மாடல்களும் ஒரு MPV-யும் இருந்தன. அதே போல டாப்10 மாடல்களில் 6 கார்கள் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் இரண்டும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தலா ஒன்றும் இந்த பட்டியலில் அடக்கம். மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யூவி-யான பிரெஸ்ஸா மாடல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19,190 யூனிட்ஸ்கள் விற்பனையாகி இந்தியாவில் அதிகம் விற்பனையான காராக உள்ளது.
இதனை தொடர்ந்து மாருதி சுசுகிநிறுவனத்தின் மற்றொரு சிறந்த செயல்திறன் கொண்ட கார் மாடலான எர்டிகா ஆகஸ்ட் 2024-ல் அதிகம் விற்பனையான இரண்டாவது காராக உள்ளது. கடந்த மாதம் இந்த காரின் 18,580 யூனிட்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 16,762 யுனிட்ச்கள் விற்பனையுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மூன்றாம் இடத்திலும், 16,450 யூனிட்ஸ்கள் விற்பனையுடன் மாருதி சுசுகி நிறுவனத்தை வேகன்ஆர் மாடல் நான்காம் இடத்திலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பஞ்ச் மாடல் 15,642 யூனிட்ஸ்கள் விற்பனையுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஆகஸ்ட் மாதத்தில் 12,844 யூனிட்ஸ்கள் விற்பனையாகி ஆறாம் இடத்தில் உள்ளது. என் மற்றும் கிளாசிக் உட்படமஹிந்திரா ஸ்கார்பியோ மாடல்கள் 12,723 யூனிட்ஸ்கள் விற்பனையாகி பட்டியலில் கோலம் இடத்தில் உள்ளன. எட்டாவது மற்றும் ஒன்பதாவதி இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ மற்றும் ஃப்ரான்க்ஸ் (Fronx) மாடல்கள் இருக்கின்றன. இவை முறையே ஆகஸ்ட் 2024-ல் 12,485 யூனிட்ஸ்கள் மற்றும் 12,387 யூனிட்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
ஆகஸ்டில் 2024-ல் அதிகம் விற்பனையாகி உள்ள டாப் 10 கார்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது டாடா நிறுவனத்தின் Nexon மாடல் ஆகும். இந்த காரின் 12,289 யூனிட்ஸ்களை நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .
Source : https://tamil.news18.com/