ஹர்ஷா சாய் | நடிகையுடன் தனிமையில்... வீடியோ மிரட்டல் - யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பகீர் வழக்கு!
232 News
ஏழைகளுக்கு பணத்தை வாரி கொடுக்கும் யூடியூபர் ஹர்ஷா சாய், ‘Mr Beast of India’ மற்றும் வாழும் கர்ணன் என்று அழைக்கப்படுகிறார். தனது ஈகை குணத்தால் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இவர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கொடுத்து கொடுத்து சிவந்த கைக்கு, போலீசார் கைவிலங்கு போடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் விஜயநகரை சேர்ந்தவர் 24 வயதானவர் ஹர்ஷா சாய். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில், முதலில் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு, தனக்கான சப்ஸ்கிரைபர்களை கவனம் ஈர்த்தார். இதையடுத்து முழுவதும் 5 ரூபாய் நாணயங்களை கொடுத்து 4 லட்சம் ரூபாய் காரை வாங்கி, அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். இதில் புகழ் வெளிச்சம் படத் தொடங்கியது. பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு தெறிக்கவிட்டார்.
Log Inn Branded Mens Wear | Mens OutFit | 50 % Offer
யூடியூப் சேனல் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை தேடிச் சென்று வாரி வழங்கினார். சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுப்பது முதல், விவசாயிக்கு வீடு கட்டிக் கொடுப்பது, விவசாய நிலத்தில் போர் போடுவது என சமூக சேவை தொடர்ந்தது.
பணத்தை கிள்ளிக் கொடுக்காமல் லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக அள்ளிக் கொடுத்தார். அதேபோன்று, ஒரு லட்சம் ஏழை குழந்தைகளை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று உணவளித்து பசியாற்றினார்.
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்பது போன்று பலருக்கும் வீடு தேடிச் சென்று உதவி செய்து சர்ப்ரைஸ் கொடுத்து வந்தார். இதன் மூலம் தனது யூடியூப் சேனலின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை கோடிகளில் உயர்த்தினார்.
Sofa Bazzar | Own Manufacturing Company - Click The Image (Price And Models) பார்க்க
இதனாலயே ஹர்ஷா சாயை, ‘Mr Beast of India’ என அவரது ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். உலக அளவில் மிகவும் பிரபலமான யூடியூபர் Mr Beast, தனது வீடியோவுக்காக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ரேஞ்சுக்கு பணத்தை வாரி இறைப்பார்.
ஆனால், ஹர்ஷா சாய், ஏழை, எளிய மக்களுக்காக லட்சங்களை வாரி இறைத்து உதவிக்கரம் நீட்டி வருவதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான யூடியூபர் ஹர்ஷா சாய் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
25 வயதான நடிகையான இவர், தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நர்சிங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையை சேர்ந்த இந்த இளம் நடிகை, சினிமா மட்டும் இன்றி டிவி ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
இவர், நிகழ்ச்சி ஒன்றில் ஹர்ஷா சாயை சந்தித்துள்ளார். பின்னர் இவரும் நட்பாக பழகிய நிலையில், நாளடைவில் காதலாக மாறியதாக நடிகை கூறியுள்ளார். திருமண ஆசை காட்டி தனிமையில் தன்னுடன் ஒன்றாக இருந்த ஹர்ஷா, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி 2 கோடி ரூபாய் வரை பணம் பறித்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நடிகை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். அதில், உண்மை தெரியவந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஹர்ஷா சாய் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க : கண்கள் இல்லாதவர்களும் இனி பார்க்க முடியும் | ELON MUSK புதிய சாதனை
ஏழை மக்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து புகழ் பெற்ற யூடியூபர் ஹர்சா சாய் மீது, நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. புகாரின் அடிப்படையில் யூடியூபர் ஹர்ஷா சாயை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், விசாரணை மேற்கொண்ட பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .
source : tamil.news18