ரூ.9000 கோடி மதிப்பீட்டில் அமைகிறது டாட்டா மோட்டார்ஸ் ஆலை... அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

192 News > Tamilnadu News

தெற்காசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி ராஜா, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர், இந்திய இளைஞர்களுக்கே முன் மாதிரியாக திகழ்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

                                    Log inn Branded Mens Wear | Upto 50% Offer -  Whatsapp Number 

முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முன்வருவது அதிகரித்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், இந்த ஆலையில் உயர் ரக மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆலை மூலம் 5000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

                மேலும் படிக்க  : கண்கள் இல்லாதவர்களும் இனி பார்க்க முடியும் | ELON MUSK புதிய சாதனை

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 


source : news18tamil