வஞ்சனை இல்லாமல் நலனை வாரி தரும் "வஞ்சரம்"

112 Blog > Health

சென்னை: மீன் என்றாலே உடலுக்கு நல்லதுதான் என்றாலும், குறிப்பிட்ட வகை மீன்களை மட்டுமே சாப்பிடுவதில் பலருக்கு ஆர்வமும், ஆசையும் எழும்.. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சிரம்..!!

மீன் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்.. அசைவ உணவுகளிலேயே, கடல் உணவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.. மீன் சாப்பிடுவதால், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.

Also read : 

புற்றுநோயின் 6 அறிகுறிகள்...இளைஞர்கள் இதை கவனிக்கமறந்துவிடாதீர்கள்...! 

முடக்கு வாதம்: அடிக்கடி மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படும்... மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து அதிகமாகவே கிடைக்கிறது.

எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.. வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுவதுடன், முழு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.. எந்த மீன் சாப்பிட்டாலும் அதில் ஏதாவது ஒரு சிறப்பு கூடுதலாக உண்டு. அதில் இந்த வஞ்சிர மீனும் ஒன்று.

காஸ்ட்லி மீன்: எந்த ஹோட்டல்களுக்கு போனாலும், இந்த வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு.. பெரிய ஓட்டல்களில் மீன் என்றாலே வஞ்சிர மீனைதான் கொண்டுவந்து தருவார்கள்.. வஞ்சரம் மீன் என்றும் சொல்வார்கள்.. எப்போதுமே காஸ்ட்லி மீன் லிஸ்ட்டில் இந்த வஞ்சிரம் இடம்பெற்றுவிடும். அதனால் சாமான்ய மக்களால் இந்த மீனை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிட முடியாது.

ஆனால், இந்த மீனிலும் பல நன்மைகள் உண்டு.. வஞ்சிரம் மீனில் நிறைய புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன.. ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கிறது.. குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பை சீராக்குகிறது.. உடல் எலும்புகளை வலுவாக்குகிறது.

ஒரு நாளைக்கு 100 கிராம் மீன் உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சைனஸ் தொந்தரவு: வஞ்சிரம் மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் பெறும்.. சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த மீன் ஒரு நல்ல மருந்து... வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதைத்தவிர, தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான், இதயத்துக்கு வலு சேர்க்க உதவுகிறது

வஞ்சிரத்தில் குழம்பு வைப்பார்கள் என்றாலும், பொறித்து சாப்பிடதான் பலர் விரும்புவார்கள்.. ஊறுகாய் போடவும் இந்த மீனை பயன்படுத்துவார்கள்.. கேரளாவில் இந்த மீனை நெய்மீன் என்பார்கள்.. மணமாகவும், ருசியாகவும் இந்த மீனை சமைப்பார்கள்.
ஒரிஜினல் வஞ்சிரம்: இத்தனை நன்மைகள் இருந்தாலும், இதில் மெர்குரி அளவு அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்க்க வேண்டும் என்பார்கள்.. அதேபோல இந்த வஞ்சிரம் வாங்கும்போது, இதே போல ஒரு மீனை விற்றுவிடுவார்கள்.. "அரைகோலா மீன்" என்று அதற்கு பெயர்.. இந்த அரைகோலாவை பார்ப்பதற்கு, அப்படியே வஞ்சிரத்தை போலவே இருக்குமாம்.. அடையாளமே கண்டுபிடிக்க முடியாதாம்.. ஆனால் சுவை வஞ்சிரத்துக்கு நேர் மாறானது. அதனால் கவனமாக பார்த்து ஒரிஜினல் வஞ்சிரம் வாங்க வேண்டும்.

Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .