இப்போது எப்படி இருக்கிறார் ரஜினிகாந்த்? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்? வெளியான புதிய தகவல்!
217 News > Tamilnadu News
சென்னை : ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என , அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த நிலையில் அவரது உடல் நலன் சீராகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது நாளை மாலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து வேட்டையன் படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு நகரங்களுக்கும் அவர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ரஜினியின் இதயத்திலிருந்து பிரிந்து செய்யும் பிரதான ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதனை கண்டறிந்து ஸ்டண்டு வைத்து சரி செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அச்சப்படும் வகையில் இல்லை, பெரிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யவில்லை.. வெறும் பரிசோதனைக்காக சென்றுள்ளார் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது போன்ற இரு வேறு தகவல்களால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகமே இது தொடர்பாக விளக்கம் அளித்தது. அதில்," ரஜினிகாந்த் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூத்த இருதயநோய் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை (எண்டோவாஸ்குலர் ரிப்பேர்) முழுவதுமாக அடைத்தார், . திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நிலையாக இருக்கிறார், உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என கூறப்பட்டது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம். பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரஜினிகாந்த்-ன் உடல்நிலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ரஜினிகாந்தின் மனைவி லதாவிடம் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து பேசியதோடு, விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இந்த நிலையில் உடல் நலன் சீராகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது நாளை மாலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .