இந்தியர்கள் 'இந்த' 10 நாடுகளுக்கு 'விசா' இல்லாமல் செல்லலாம்.. எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா? லிஸ்ட் இதோ!
44 Blog
ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.
உலகை ஆராயவும், புதிய இடங்களைக் கண்டறியவும் பலருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதிர்ஷ்டவசமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் சூழல் தற்போது உருவாகி உள்ளது. உலகளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, சிக்கலான விசா விண்ணப்பங்களின் தேவையை நீக்கி, இந்தியப் பயணிகளை எளிதாக வரவேற்க பல்வேறு நாடுகளுக்கு வழிவகுத்துள்ளது.உலக அளவில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்சில் (Henley Passport Index) இந்தியா 82வது இடத்தைப் பிடித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 2 புள்ளிகள் குறைந்துள்ளது. இருப்பினும், ஜனவரி 2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், தற்போது இந்தியர்கள் விசா இல்லாமல் 10 நாடுகளுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த நாடுகள் என்று தற்போது பார்க்கலம்.
- தாய்லாந்து 30 நாட்கள் (நவம்பர் 11, 2024 வரை): இங்கு பிரம்மிக்க வைக்கும் கடற்கரைகள், கலாச்சாரம் மற்றும் சுவையான உணவு வகைகளை மக்கள் ஆராயலாம்.
- மலேசியா 30 நாட்கள் (டிசம்பர் 31, 2024 வரை): பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் (Petronas Twin Towers) போன்ற அடையாளங்களுடன், மழைக்காடுகள் மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் கலவையை இங்கு அனுபவிக்கலாம்.
- கத்தார் செல்ல 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. தோஹா (Doha) நகரின் அற்புதமான, வியக்க வைக்கும் அழகை கண்டு ரசிக்கலாம்.
- இலங்கை 6 மாதங்களுக்கு இலவச விசா (அக்டோபர் 1, 2024 முதல்). செழுமையான கலாச்சாரம் மற்றும் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற அழகிய தீவுகளை கண்டு ரசிக்கலாம்.
- சீஷெல்ஸ்(Seychelles) 30 நாட்களுக்கு இலவச விசா. இங்கு கடற்கரைகள், பவளப் பாறைகள் மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.
மக்காவ் (Macao) 30 நாட்களுக்கு இலவச விசா. இங்கு கிழக்கின் லாஸ் வேகாஸில்(Las Vegas of the East) அழகிய இரவு மற்றும் கலாச்சார இணைவைக்(cultural fusion) ரசிக்கலாம்.
- பூடான் செல்ல 14 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. இங்கு இமயமலையின் அமைதியான நிலப்பரப்புகள், கம்பீரமான மடங்கள் மற்றும் வளமான ஆன்மீக கலாச்சாரத்தை கண்டு ரசிக்கலாம்.
- நேபாளத்திற்கு செல்ல விசா தேவையில்லை. இங்கு எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம். இந்த நாடு சாகச அனுபவங்களை பெறலாம் மற்றும் வளமான சூழலை கண்டுகளிக்கலாம்.
- மொரிஷியஸ் செல்ல 90 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டு உள்ளது. இங்கு ஆடம்பர ஓய்வு விடுதிகள் தங்கி அழகிய கடற்கரைகள் விசிட் செய்யலாம். மேலும் சுவையான உள்ளூர் உணவுகளை உண்டு மகிழலாம்.
- எல் சால்வடார் (El Salvador) 180 நாட்கள்: எல் சால்வடார் (El Salvador) வரலாறு, கலாச்சாரம் மற்றும் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்றவை.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .
source :news18tamil