தூங்குவதற்கு முன் இதை பண்ணுங்க உங்க சுகர் லெவல் கன்ட்ரோலா இருக்கும்.| Tips to Prevent Blood Sugar from Dropping at Night

114 Blog > Health

வெறும் மாத்திரைகளை மட்டும் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காது. அதோடு சேர்த்து நம் உணவு முறை , வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து அதை முறையாக பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு என்னும் நாள்பட்ட நோயை கட்டுப்படுத்த வேண்டுமெனில் வாழ்க்கை முறையில் சில ஒழுக்கங்களை கடைபிடிப்பது அவசியம். வெறும் மாத்திரைகளை மட்டும் சரியான நேரத்தில் போட்டுக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்காது. அதோடு சேர்த்து நம் உணவு முறை , வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து அதை முறையாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் சில விஷயங்களை பின்பற்றுவது மறுநாள் காலை எழுந்திருக்கும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சீரான நிலையில் நீடிக்கும். அவை என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மாலை சிற்றுண்டி : படுக்கைக்கு செல்லும் முன் பசி இருப்பது போல் உணர்ந்தால் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட ஹெல்தியான சிற்றுண்டிகளை சாப்பிடலாம். அதோடு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நட்ஸ், க்ரீக் யோகர்ட் , காரட் போன்றவை உட்கொள்ளலாம். இந்த சிற்றுண்டிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்கும். சர்க்கரை , சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் போன்ற சிற்றுண்டிகள் இரத்த சர்க்கரை அளவை இரண்டு மடங்காக உயர்த்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


சரியான நேரத்தில் தூக்கம் : தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்குவது அவசியம். குறிப்பாக தினமும் அதே நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். அதோடு ஹார்மோன்களை சீராக வைத்திருக்கும். நீங்கள் நேரம் தாழ்த்தி தூங்குவது, முறையான நேரத்தை கடைப்பிடிக்காமல் நினைத்த நேரத்தில் தூங்குவது இன்சுலின் தட்டுப்பாட்டை அதிகரிக்கும். பின் நீரிழிவை கட்டுக்குள் வைப்பதே சிரமமாக இருக்கும். எனவே தூக்க நேரத்தை தினமும் சரியாக பின்பற்றுங்கள்.


ஸ்க்ரீனிங் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள் : நீங்கள் இரவு நேரத்தில் செல்ஃபோன் பார்ப்பது அல்லது டிவி பார்ப்பது தூக்கத்தை தடுக்கலாம். எனவே தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே உங்களுடைய ஸ்க்ரீனிங் நேரத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். அதற்கு பதிலாக புத்தகம் வாசிக்கலாம். படுக்கை அறையை தயார் செய்து அமைதி நிலைக்கு சென்றுவிடுங்கள். பின்பு தூக்கம் தானாக வந்துவிடும்.

தண்ணீர் அருந்துவதில் கவனம் : நீரிழிவு நோயாளிகள் எப்போதும் நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். அதேசமயம் தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் நடு இரவில் அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடலாம். இது உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு இடையூராக இருக்கும். இதனால் தூக்கம் சரியாக இல்லாமல் இரத்த சர்க்கரை உயரலாம். எனவே இரவு தூங்க தயாராகிவிட்டால் தண்ணீர் அதிகமாக குடிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள் : தூங்க செல்வதற்கு முன்பு இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து குறிப்பு எழுதி வைத்துக்கொள்வது அவசியம். இதனால் உங்கள் குளுக்கோஸ் அளவின் ஏற்ற இறக்கத்தை எளிதில் கண்டறிந்து கையாளலாம். எதனால் உயர்கிறது, எதனால் சீராக இருக்கிறது என்பதை எளிதில் கண்டறிய உதவலாம். அதன்படி உணவு முறையில் மாற்றங்களை செய்து சீராக வைத்துக்கொள்ளலாம்.

மேற்கூறிய 5 குறிப்புகளை தூங்குவதற்கு முன் பின்பற்றி வருகிறீர்கள் எனில் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் சீரான நிலையை காண்பீர்கள். அதோடு எளிதாக உங்கள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 



source : news18tamil