பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! Rs.50 thousand scholarship for women!

461 News > Tamilnadu News

தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு ரூ. 50,000 உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தையும் சமீபத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சமூக நலத்துறை சட்டமன்றத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த ரூ. 50 ஆயிரம் கொண்டு, நடமாடும், உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில் செய்யலாம் என அறிவித்திருந்தது. இதற்காக மொத்தம் ரூ. 1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.


Also Read : தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிரடி முடிவு?


இதற்கான ஒப்புதல் எல்லாம் பெறப்பட்டு தற்போது பயனாளர்கள் திட்டத்தில் பயன் பெற்ற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான விதி முறையையும் அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தத் திட்டத்தில் மானியம் பெறுபர்கள், 25 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியானவர் என்று அறிவித்துள்ளது.

அதேபோல், மானியத்தை பெற விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால், கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம் பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 



source  : news18tamil