ரூ. 20 லட்சம் வரை கடன்.. அதுவும் 7% வட்டியில்..யாருக்கெல்லாம் கிடைக்கும் ? முழு விவரம் இதோ..!!
44 News > Tamilnadu News
தென்காசி மாவட்டத்தில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் குறு நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியான தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியான 7 சதவீதம் வட்டிவிகிதத்தில் ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெற முடியும்.
தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா Furnitures கடைகளும் மற்றும் Sofa Manufacturers - உங்களது மாவட்டத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும் .
தகுதி: இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை பெறலாம்.இத்திட்டத்தில் கடன்பெற குறைந்தபட்ச வயது 18 அதிகபட்சமாக 65-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
முந்தைய இரண்டு ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களாகவும் இருத்தல் அவசியம்.ஏற்கனவே, தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்:**திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 8939273253 மற்றும் 8925814616 என்ற கைபேசி எண்களிலோ அல்லது தென்காசி மாவட்ட தொழில் மையத்திற்கு நேரில் சென்று தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .