Zomato,Swiggy : பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிளாட் ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய Zomato,Swiggy.. எவ்வளவு தெரியுமா..?

180 News

உணவு விநியோக தளமான Zomato, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பிளாட் ஃபார்ம் கட்டணத்தை 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தி உள்ளது. பிளாட் ஃபார்ம் கட்டணம் என்பது ஜிஎஸ்டி, உணவகக் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணம் ஆகியவற்றைத் தவிர, ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் விதிக்கப்படும் கூடுதல் கட்டணம் ஆகும்.

Zomato முதன்முதலில் கடந்தாண்டு ஏப்ரலில் பிளாட் ஃபார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. அப்போது ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் வசூலித்தது. தற்போது அதை ஒரு ஆர்டருக்கு 10 ரூபாய் என உயர்த்தியுள்ளது.


Zomato ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் ஆர்டர்களை வழங்குகிறது. இந்த பிளாட் ஃபார்ம் கட்டணம் பெயரளவில் தோன்றினாலும், இதன்மூலம் Zomato அதிகளவில் வருவாயை ஈட்டி வருகிறது. மார்ச் மாதம் வரை பிளாட் ஃபார்ம் கட்டணமாக சுமார் 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக Zomato தெரிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் தங்களின் சேவைகளை பராமரிக்க பிளாட் ஃபார்ம் கட்டணத்தை சற்று அதிகரித்துள்ளதாக Zomato அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் Zomato-வின் ஆர்டர் அளவு 64.7 கோடியாக இருந்தது. பிளாட் ஃபார்ம் கட்டணம் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டாலும், ஆண்டுக்கு அதன் வருவாயில் கூடுதலாக 65 கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொமோட்டோவை தொடர்ந்து அதன் போட்டியாளரான ஸ்விக்கியும் தனது பிளாட் ஃபார்ம் கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 


source :https://tamil.news18.com/photogallery/business/do-you-know-how-much-zomato-has-increased-its-platform-fees-for-the-festive-season-1639236.html