கொரோனா காரணமில்லை.. ஆனால்.. அதிகாலையில் விஜயகாந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? பின்னணி

387 News > National News

சென்னை:

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். இதையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து அவரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

வழக்கமான பாதிப்பு இல்லை:

அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு . அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பேரிகார்டுகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார்.

இப்போது மரணத்திற்கு என்ன காரணம்?:

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளன.

அதை தொடர்ந்து கொரோனா ஏற்பட்டு உள்ளது. நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மரணத்தின் பின் அது பாசிட்டிவ் ஆக இல்லை. இதனால் அவரின் மரணத்திற்கு கொரோனா காரணம் என்று கூற முடியாது. மரணத்திற்கு பின் செய்யப்பட்ட சோதனையில் அவர் கொரோனா பாசிட்டிவ் இல்லை. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு சுத்தமாக மூச்சு விடும் திறன் இல்லாமல் போய் உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது.

இந்த நிலையில் மரணத்திற்கு பின் கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பதால்.. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


source:https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-real-reason-behind-dmdk-founder-vijayakanth-demise-569711.html