NICL வேலைவாய்ப்பு 2024: ரூ.39,000 சம்பளம்..டிகிரி தகுதி போதும்..முழு விவரம் இதோ..!!

157 News > JOB

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) உதவியாளர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (என்ஐசிஎல்) வகுப்பு-III பிரிவில் 500 உதவியாளர்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்புஅக்டோபர் 22, 2024 அன்று வெளியிட்டது.

**விண்ணப்பிக்கும் முறை:**இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்Nationalinsurance.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகுதி: NICL உதவியாளர் பணியிடங்களுக்குபொது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள் (EWS), மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வேட்பாளர்களுக்கு ரூ.850 ஆகும். பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST),மாற்றுத்திறனாளிகள் (PWD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.

**வயதுவரம்பு:**இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு 21 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம்.

                                                                       

கல்வித் தகுதி: இந்த பதவிக்கு கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு வழிமுறைகள்: தேர்வு செயல்முறை இரண்டு கட்டமாக நடைபெறும்.எழுத்துத் தேர்வு , பிராந்திய மொழித் தேர்வு இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட எழுத்து தேர்வு நவம்பர் 30, 2024 அன்றும், இரண்டாம் கட்ட மொழி தேர்வு டிசம்பர் 28, 2024 அன்று நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து தேர்வும் கணினி வழியாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது. மேலும், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை உட்பட பல நிலைகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க : மகளிருக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்... மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?


விண்ணப்பிக்க கடைசி தேதி: விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 11 ஆம் தேதி ஆகும்.

**சம்பளம்:**இதற்கான சம்பளமாக 39,000 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.


Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 



source : https://tamil.news18.com/employment/tamilnadu-national-insurance-company-limited-hiring-job-openings-application-online-details-sgi-gwi-local18-1645308.html