சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன்... மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கு பெஸ்ட் கடல் உணவு...

136 Blog > Health

சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன் மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.

சுவையில் மீன்பிரியர்களுக்கு பிடித்தமான மீனாகவும், தட்டுப்பாடு இன்றி அனைத்து நேரத்திலும் குறைவான விலையில் கிடைக்க கூடிய மஞ்சள் பாறை மீன். இதயம், மூளை, எலும்பு, கண் ஆகியவை பாதுகாக்கும் இந்த மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தொகுப்பில் பார்க்கலாம்.

                                                       Shop Contact Number - 9942159835

வெளிர் வெள்ளை நிறத்தில் துடுப்புகளில் மஞ்சள் நிறம் கொண்டு முகத்தில் கரும்புள்ளிகளுடன் தட்டையான உடலமைப்பு நீண்ட வயிற்றினை கொண்ட மீனாகும். வெளிர் வெள்ளை மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மஞ்சள் பாறை என்று மீனவர்களால் அழைக்கப்படுகிறது.

பாறை மீன் வகைகளில் தேங்காய் பாறை, தோள்பாறை, நெய் பாறை, மஞ்சள் பாறை, என 13 வகையான பாறை வகைகள் தமிழக கடற்கரை பகுதிகளில் உள்ளன. இவை அனைத்திலும் கத்தி போன்ற அறும்பு இருக்கும் கையை வேகமாக வைத்து இழுத்தால் கையினை அறுத்துவிடும் இதன் மூலம் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

கடல்புற்கள், கடல் தாவரங்கள், கடல் பாசிகளை உண்பதால் ஆதித சுவையிலும் தட்டுப்பாடு இன்றி எப்போதும் கிடைக்கும் மீனாக விலையும் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் மற்றும் மீன்பிரியர்களின் ஃபேவரைட் மீன் வரிசையில் இதுவும் உள்ளது. அரைகிலோ முதல் 1 கிலோ வரையில் உள்ள மீன்களில் சுவை நன்றாக இருக்கும் என்பதால் நல்ல விலைக்கு செல்கிறது. அதைவிட எடை அதிகமாக இருக்கும் மீன்கள் சற்று குறைவான விலைக்கு விற்கபடுகிறது.

மருத்துவ குணங்கள்;- நல்ல கொழுப்பு, வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் - டி சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஒமேகா - 3 ஊட்டச்சத்து உள்ளதால் இதயத்தை பாதுகாத்து, இதய நோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. கால்சியம், பாஸ்பரஸ் எலும்புகளை வலுவாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், மன அழுத்தம், முடி உதிர்தல், ஆஸ்துமா ஆகிய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. ‌புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அயோடின் தாதுசத்து முன் கழுத்து கழலை நோய் வராமல் தடுக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வைட்டமின் பி12 கொலஸ்ட்ராலை சமநிலை படுத்துகிறது. வைட்டமின் ஏ கண்பார்வை பாதிப்பை தடுக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதால் தோல்களை வலுவலுபாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மஞ்சள் பாறை மீன் குழம்பு, கிரேவி, பொறித்து சாப்பிடலாம் சில மீன்கள் குழம்பு நன்றாக இருக்கும், பொறித்தால் நன்றாக இருக்காது. ஆனால் இது இரண்டுமே நன்றாக இருக்கும். கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களின் உணவு விடுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.


Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் . 



source : https://tamil.news18.com/photogallery/lifestyle/food-health-benefits-of-yellowtail-fish-best-seafood-for-brain-and-nerve-diseases-mnj-pdp-local18-1645977-page-7.html