தமிழ்நாடு அரசு அதிரடி!மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் ......
251 News > Educational News
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வேண்டி பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.
ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற மத்திய அரசை சார்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயில கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை (BC, MBC, DNC) சார்ந்த மாணவ மாணவிகள் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு குறைவாக இருக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணங்கள் ஆகிய கட்டணங்களுக்கு மாணவர்களால் செலுத்தப்பட்ட கட்டணம் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வித் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வித் தொகை 2024-2025ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் பெற விண்ணப்பிப்பதற்கு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் அல்லது இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .
அலுவலக முகவரி,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சென்னை 5,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம்,
சென்னை-5