
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மகால் நூல கம் ஆசியாவின் மிகப்பழமையான நுாலகங்களுள் ஒன்றாகும். தஞ்சாவூரை ஆட்சிசெய்த நாயக்கர்கள், மராட்டியர்கள் இந்த நூலகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னர் நூல்கள் மீது கொண்ட ஆர்வத் தால், நூலக வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தார்.
இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் 24,165 ஓலைச்சுவடிகளும், 23,169 காகிதச் சுவடிகளும், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப் பட்ட 3 லட்சம் மோடி எழுத்து வடிவ ஆவ ணங்களும் உள்ளன. பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட சாமுத்திரிகா லட்சணங்கள் என்ற நூலும், கிரந்த எழுத்தில் 24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட வால்மீகியின் முழுமையான ராமாயண சுவடியும் உள்ளது.
அத்துடன் அரியவகை மூலிகைகள், மருத்துவக் குறிப்புகளும், ஆன்மிகம், ஜோதிடம், ஓவியங்கள் உள்ளிட்டவை குறித்த நூல்களும் உள்ளன. மன்னர் காலத்தில் மன்னரும், மன்னரின் குடும் பத்தினரும் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த நூலகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1918-ம் ஆண்டு அக்.5-ம் தேதி பொது நூலகமாக மாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன் படுத்தி வருகிறார்கள்.
மேலும், பொதுமக்களின் பார்வைக் காக பல்வேறு ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், மன்னர்கள் போரின்போது பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராள மான பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உள்ளூர்சுற்றுலாப் பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின் றனர்.
அதேபோல வரலாற்று ஆராய்ச்சியா ளர்களும் தினமும் இங்கு வந்து சுவடி கள் மற்றும் பல்வேறு நூல்களை ஆதா ரமாகக் கொண்டு ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், ஒரு சில அரிய வகை நூல் களை அருங்காட்சியகத்தில் வைக்காமல் தனி அறையில் பூட்டி வைத்துக்கொண்டு செல்வாக்கு படைத்தவர்களுக்கு மட்டுமே காட்டுகின்றனர். இத்தகைய நூல்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆராய்ச்சியா ளர்கள் சிலர் கூறியபோது, "தஞ்சா வூர் சரஸ்வதி மகால் நூலக அருங்காட் சியகத்தில் இரண்டாம் சரபோஜி மன்னர் சேகரித்த அரிய நூல்கள், ஆங்கிலேயர் காலத்தில் கைகளால் வரையப்பட்ட அரிய புகைப்படங்கள், ராமர் பாலத்தின் அரிய புகைப்படம், ஒரே மரப்பலகையிலான குரான் படிக்க உதவும் புத்தக ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பொருட்கள் தனி அறையில் உள்ளன.
அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ள மற்ற பொருட்களைப் போலமுன்னோர்களின் இத்தகைய சொத்து களையும் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டால்தான் உண்மை யான விஷயம் உலகுக்கு தெரியவரும். எனவே, தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டு செல்வாக்கானவர்களுக்கு மட்டுமே திறந்து காட்டப்படும் அரிய பொருட்களை அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சரஸ்வதி மகால் நூலக பணியாளர்களிடம் கேட்டபோது, "பாதுகாப்புக் காரணங்களுக்காக தனி அறையில் பூட்டி வைத்துள்ளோம். முறையாக அனுமதி பெற்று வந்தால் திறந்து காட்டுவோம்" என்றனர்.
TOURS AND TRAVELS : AL PARVEZ TOURS AND TRAVELS
source :https://www.hindutamil.in/news/tamilnadu/526887-tanjore-saraswati-mahal-2.html