ஃபெங்கல் புயலாக மாறிவருகிற நிலையில் ,வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்று எச்சரிக்கை !
369 News > Weather Newsதென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று பெங்கல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் , ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது "X" தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புயலாக மாறி நாளை (நவம் 30) பிற்பகல் 1மணி அளவில் கரையை கடக்க துவங்கும். ==> சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் அருகே புயலாகவே கரையை கடக்கும். ==> இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு தரைக்காற்றுடன் இன்று மழை பதிவாகும். ==> குறிப்பாக #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் அதித கனமழை பதிவாகும். சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ==> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட மக்கள் இன்று இரவு 10 முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம், பாதுக்காப்பாக இருங்கள். அச்சப்பட தேவையில்லை.
https://twitter.com/Deltarains/status/1862352268189892688
Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .