சென்னையில் இருக்க கூடிய 7000 நகை கடைகள் இன்று மூடப்படுவதாக தகவல்

127 News > Tamilnadu News

 நேற்று வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என கூடியுள்ளது .அதன்படி சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து  வருகிற நிலையில் ,மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும் ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மொத்தமாக 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.