50,000 முதல் 96,000 வரை சம்பளம் என்று அரசு வேலை அறிவித்துள்ளது !

293 News > JOB

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடங்கள் பற்றிய விபரங்கள் :

பொதுப் பிரிவில்   = 43 இடங்களும்,

எஸ்சி பிரிவில்       = 15 இடங்களும்

எஸ்டி பிரிவில்       = 10 இடங்களும்,

ஒபிசி பிரிவில்        = 34 இடங்கள்,

பொருளாதாரத்தில்பின்தங்கியவர்களுக்கு  = 6 இடங்களும்

மாற்றுத்திறனாளிகளுக்கு                                  =5 இடங்களும்

மருத்துவ பிரிவில் எஸ்சிக்கு                               = 1 இடங்களும் ,

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு  = 2 இடங்களும் அறிவிக்கபட்டுள்ளது .


வயது மற்றும் கல்வி தகுதிகள் :

உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது ,  01.11.2024 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபடியாக 30 வயதும் இருக்கலாம். 

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதில் தளர்வுகள் உள்ளன.

அதேபோல் ,விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பொதுத்துறை, மனித வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதிப் பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், எம்பிஏ/சிஎஃப்ஏ/சிஏ/சிஎம்ஏ.

உதவி மேலாளர் பதவிக்கான சம்பளம் ரூ.50,925 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை ஊதியம் வழங்கப்படும். கூடுதலாக, DA, HRA மற்றும் CCA வழங்கப்படுகிறது.

சம்பளம் மற்றும் தேர்வு முறை :

உதவி மேலாளர் பதவிக்கான சம்பளம் ரூ.50,925 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை ஊதியம் வழங்கப்படும். கூடுதலாக, DA, HRA மற்றும் CCA வழங்கப்படுகிறது.

மருத்துவம் தவிர,பிற பிரிவுகளில் ஆன்லைன் தேர்வுகள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல்கள் ஆகியவை அடங்கும். 

வெற்றி பெற்றவர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உதவி மேலாளர்களாக நியமிக்கப்படுவார்கள். 

மருத்துவத் துறையில் பணியிடங்களுக்கு இரண்டு சுற்று நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  https://ibpsonline.ibps.in/gicionov24/ 

எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களை தவிர மற்றவர்களுக்கு  விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்பட்டுள்ளது .


கடைசி தேதி ; 9.12.2024


ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 5.1.2025


Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .