பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் தேதி மற்றும் டோக்கன் பற்றிய தகவல் வந்துள்ளது ......

667 News > Tamilnadu News

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கபடுவது இயல்பு ,அத்தகைய வகையில் வருகிற புத்தாண்டு 2025ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களை எங்களுடைய nibz(நிப்ஸ்) நிறுவனத்தின் இணையத்தளம் மூலமாக உங்களுக்கு பகிர்கிறோம் .

அதன்படி 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ரூ. 249.76 கோடி செலவு செய்து ,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு என 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் வழங்கப்படும் என்றும் மேலும் இலவச வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டடங்களிலும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் .

பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் ,டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது .அதன்படி ,தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

 பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் வருகிற 9 ஆம் தேதி தொடங்கப்படுகிறது .மேலும் விடுமுறை தினமான ஜனவரி 3 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதிகளிலும் நியாய விலைக்கடைகள் இயங்கும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளதாக தகவல்.


refer : https://tamil.news18.com/photogallery/tamil-nadu/pongal-2025-when-will-pongal-gift-package-be-given-first-important-announcement-by-tamilnadu-government-kpk-1689690.html

Join Tamilnadu Makkal Whatsapp Group: https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p

           இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .